Tuesday, December 29, 2015

Vinnin Venthan - விண்ணின் வேந்தன் மண்ணில் - Houston Tamil Church







விண்ணின் வேந்தன்

Words :  Suresh Frederick
Tune :     Joy Singh

விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்! பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் - 2

1. வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் - அன்னையுள்ளம்

2. தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட - அன்னையுள்ளம்



Wednesday, December 23, 2015

உள்ளம் மகிழ் கூட்டத்தை Christmas Song Words: Suresh Frederick Tune: Matthew Methuselah


உள்ளம் மகிழ் கூட்டத்தை

Words: Suresh Frederick
Tune: Matthew Methuselah

உள்ளம் மகிழ் கூட்டத்தை
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட 
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன்
கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ....
வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் - 1
மேய்ப்பர் கேட்ட செய்தியை....
நானும் இங்கே கேட்டேனே-2
மேய்ப்பர் கூட்டம் போலவே
நானும் அங்கே போகிறேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ....
வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் - 2
சின்ன இயேசு பாலகன்....
தூங்கும் கோலம் கண்டு நான்-2
சிந்தை மகிழ் கொள்ளுவேன்
சொல்லி நானும் பாடுவேன்-2
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே ....
வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2

சரணம் - 3
நல்ல மேய்ப்பர் இவர் தான்
நன்றாய் ஆளப் போகிறார்-2
நம்மை இன்றே தருவோம்
நன்மை கோடி பெறுவோம்-2
தந்தேனே தந்தேனே என்னை தந்தேனே ....

தந்தேனே தந்தேனே உள்ளம் தந்தேனே-2 

Wednesday, December 16, 2015

இரட்சகர் பிறந்தாரே Christmas Song by Suresh Frederick





இரட்சகர் பிறந்தாரே

Words : Suresh Frederick
Tune: Joy Singh

இரட்சகர் பிறந்தாரே!
தாவீதின் ஊரினிலே!
இயேசு என் உள்ளில் வந்தாரே
கேளுங்கள் மானிடரே
சரணம்
1.      பாரின் பாவம் போக்க இயேசு
பாரில் பாலன் ஆனார்-2
          இயேசுவின் அன்பைப் பாருங்களே
இயேசுவைப் பாடுங்களே-2   (இரட்சகர் பிறந்தாரே)

2.      ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை
ஏழை மேய்ப்பர் கண்டார்-2
உண்மையில் நம்மை நேசித்தாரே

தன்னையே தந்தாரே-2         (இரட்சகர் பிறந்தாரே)

Monday, December 7, 2015

விந்தை மீட்பர் Christmas Song by Suresh Frederick



விந்தை மீட்பர்

Words: Suresh Frederick
Tune: Joha Devasitham

விந்தை மீட்பர் நிந்தை நீக்க
கந்தை அணிந்து வந்தார் பாரில்
மந்தை ஆயர் சாஸ்திரி மூவர்
மகிழ்ந்து பணிந்தார் பாரீர்

செல்வோம், செல்வோம்
நாமும் செல்வோம்
பாவியை மீட்க வந்த
பாலனை பணிய
செல்வோம், செல்வோம், செல்வோம்

1. ஓய்ந்திடாது போற்றும் பரம சேனை
ஒய்யாரமாய் மீட்டும் இசைவேளை
ஒப்பில்லா அந்த இனிய இசையில்
ஒன்றிட நாமும் செல்வோமே

2. ஆர்ப்பரிக்கும் அந்த வானோர் கூட்டம்
ஆரவாரம் விண்ணை பிளந்திடுமே
ஆனந்தம் மிக்க தொனியில் திளைக்க
ஆர்வமாய் நாமும் செல்வோமே

3. கனிவாக பாடும் தேவதூதர்
கவர்ந்திடும் கான தேன் மழையில்
கருத்து மிக்க பாடல்கள் பாடிட
கருத்தாய் நாமும் செல்வோமே


வார்த்தை மாம்சம் ஆனாரே Christmas Song by Suresh Frederick



வார்த்தை மாம்சம் ஆனாரே

Words: Suresh Frederick
Tune: Joshua and X.Paul

வார்த்தை மாம்சம் ஆனாரேதீர்க்கன்
வார்த்தை நிறைவேறிற்றே
வான தூதர்கள் வாழ்த்துரைக்க
வானவர் வையகம் வந்தாரே

1. பாவத்தை போக்கிடும் பகலவனே
பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க - நொறுங்கி
பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட
பாலனாய் பாரிலே பிறந்தாரே

2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த
நீங்கிடா கறைகள் நீக்கிடவே - தாழ்மையின்
நிலையை தோழியே சுமக்க
நித்திய இராஜனாய் உதித்தாரே

3. ஆதியும் அந்தமும் ஆனவரே
அனைவரும் நித்திய வாழ்வடைய - ஏழ்மையின்
அடிமை ரூபமே எடுத்தார்
அவரின் ஆட்சிக்கு முடிவில்லை




Thursday, November 19, 2015

Tamil Christmas Song - Vinnin Vendhan Written by Suresh Frederick from Athisayam Vol 3




விண்ணின் வேந்தன்

Words        :         Suresh Frederick
  Tune        :         Joy Singh

விண்ணின் வேந்தன் மண்ணில்
பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம்
வாய்மையானவர் வழியுமானவர்
வியப்புடன் போற்றிடுவோம்

அன்னையுள்ளம் கொண்டவர்,
முன்னணையில் பிறந்தார்
கந்தைத்துணி கோலமாய்,
மீட்பரே பிறந்தார்!  பிறந்தார்!
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார் - 2

வாழ்வாயிருப்பவர் வாழ்வைத் தந்தவர்
மாறும் உலகிலே மாறா நல்லவர்
நேசகரம் நீட்டி நேசிக்கின்ற தேவன்
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
அவரைப் பாடி மகிழ்வோம் - அன்னையுள்ளம்

தோளில் சுமப்பவர் தோழன் ஆனவர்
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
தூதர் வந்து பாட - அன்னையுள்ளம்